தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த தேர்தல்களை விட இந்த முறை தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படியே தமிழகம் முழுவதும் 82.24% வாக்குகள் பதிவாகியிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 மணிக்கு முன்பாக வந்த வாக்காளர்களுக்குத் டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் கரூர் மாவட்ட மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் முதலிடம் பிடித்துள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி கரூரில் அதிகபட்சமாக 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு நேர்மாறாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் இந்த முறை மகளிர் மட்டுமே நிர்வகிக்கும் 325 பிங்க் வாக்குச்சாவடிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் பணியாற்றும் சிறப்பு வாக்குச்சாவடிகள் எனப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. காலை 9 மணிக்கு 17 சதவீதத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு, மதியம் 3 மணிக்கு 70 சதவீதத்தை எட்டி, மாலையில் 82 சதவீதத்தைத் தாண்டி புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் இது 6 மணி நிலவும் பொறுத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் மின்னணு இயந்திரங்களில் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

LIVE 24 X 7