தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர், இன்று காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கமாக அமைந்தது.
இன்று காலை தலைமைச் செயலகம் வருகை தந்த ஆளுநருக்குச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் செயலாளர் சாந்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்துச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர். சரியாகக் காலை 10 மணிக்கு அவைக் கூடியதும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டன. பின்னர், தமிழில் "வணக்கம்" கூறித் தனது உரையைத் தொடங்கிய ஆளுநர், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த மதச்சார்பற்ற சமூக நீதி அரசு செயல்படும்."
பல தடைகளைத் தாண்டி இரண்டே ஆண்டுகளில் த.வெ.க ஆட்சியைப் பிடித்துள்ளதைக் குறிப்பிட்ட ஆளுநர், "விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை முதலமைச்சர் விஜய் பதிவு செய்துள்ளார். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது" என்றார்.
தொடர்ந்து, "தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும். தேசிய கல்விக் கொள்கையை (NEP) இந்த அரசு கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்ற நிபந்தனையை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும், கோவை, மதுரை மற்றும் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்.
"கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி ரூ.10 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமை ஏறியுள்ளது. இத்தகைய கடுமையான நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், த.வெ.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முந்தைய அரசின் கொள்கைகளைத் தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும், தலைமைச் செயலாளர் தலைமையில் 'தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்' புதிதாக அமைக்கப்படும்" என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7