தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இன்று காலை கோட்டைக்கு வருகை தரும் ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டசபைச் செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து பேரவை மண்டபத்தில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்ற, அதன் தமிழாக்கத்தைச் சபாநாயகர் வாசிப்பார். இந்த உரையில் புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் இடம் பெறவுள்ளன. ஆளுநர் உரை முடிந்ததும் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.
வெள்ளை அறிக்கை மற்றும் புதிய அறிவிப்புகள்
இந்த கூட்டத்தொடரில் தமிழகத்தின் தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் தயாரித்துள்ள மாநில நிதிநிலை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுபோக, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான பல்வேறு புதிய அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் இந்த கூட்டத்தொடரில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் பேரவை நிகழ்ச்சிகள் எப்போதும் 'தமிழ்த்தாய் வாழ்த்து'டனே தொடங்கப்பட்டன. அப்போது தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர் வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது. தற்போது தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் த.வெ.க அரசு, வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவையைத் தொடங்குமா அல்லது ஆளுநரின் விருப்பப்படி தேசிய கீதத்துடன் தொடங்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஒருவேளை தேசிய கீதமோ அல்லது வந்தே மாதரமோ முதலில் இசைக்கப்பட்டால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், தமிழகத்தில் அண்மைக்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், மின்தடை, பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை எழுப்பப் பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க வியூகம் வகுத்துள்ளன. இதனால், கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளும், அதற்கு அரசுத் தரப்பின் அதிரடிப் பதில்களும் என இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்குத் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7