தமிழ்நாடு

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...
SCHOOL CLOSED IN THANJAVUR
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 03) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து நட்த்தப்பட ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயையும், நடிகையையும் இணைத்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (ஆகஸ்ட் 04) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதோடு, சட்டப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். உதயநிதியின் கைதுக்கு ஆதரவாக தவெகவினர் ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில், அவரது கைதை எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.

குறிப்பாக, தஞ்சையில் திமுகவினர் நடத்தி வரும் போராட்டத்தில் முதலமைச்சர் விஜயின் உருவ பொம்மைகளை எரித்து தவெக அரசிற்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பதற்றமான சூழ்நிலை காரணமாக தஞ்சையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.

உதயநிதி கைது செய்து அழைத்து வரப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சையில் நர்சரி, ப்ரைமரி, மெட்ரிக் போன்ற10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. ஒரு சில பள்ளிகள் பிற்பகலில் விடுமுறை அறிவித்து மாணவ - மாணவிகளை வீட்டிற்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தஞ்சையில் காலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது திமுக - தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்ட காரணத்தினால் பதற்றமான சூழ்நிலைகளில் ஏற்படும் முன்னரே மாணவர்களுக்கு ஆபத்துகள் ஏறப்டா வண்ணம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விடுமுறை அளித்த தனியார் பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.