தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, பெண்களின் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்ற கோப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டிருந்தார். இத்திட்டம் இன்று (மே 29) முறைப்படி தொடங்கப்பட இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இறுதி நேரத்தில் இந்த அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது மேலாளர் ஜெகதீஸ் இல்லச் சிறப்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி - சட்டையுடன் நேரில் சென்று கலந்து கொண்டார். பொதுவாகத் தலைமைச் செயலகத்திற்கு வரும்போது 'கோட் சூட்' உடையில் வரும் முதலமைச்சர், இன்று மேலாளர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த கையோடு அதே பட்டு வேட்டி - சட்டையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.
இன்று நடைபெறவிருந்த முக்கிய அரசுத் திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி வீட்டுத் தனியார் நிகழ்ச்சிக்குச் சென்றிருப்பது தற்போதைய அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் சூழலில், மேலாளரின் வீட்டு நிகழ்ச்சிக்காக மிக முக்கியமான அரசு திட்டத்தின் தொடக்க விழாவை ரத்து செய்வதா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

LIVE 24 X 7