தமிழ்நாடு

நகை பிரியர்கள் ஹேப்பி நியூஸ்.. வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

நகை பிரியர்கள் ஹேப்பி நியூஸ்.. வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை!
Gold Rate
சென்னையில் கடந்த சனிக்கிழமை சரிவைச் சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்றும் (திங்கட்கிழமை) மேலும் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை

கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.800 அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,05,600 ஆகக் குறைந்து விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நீடிக்கிறது. சென்னையில் இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தொழில்துறை பயன்பாட்டிற்கான ஒரு கிலோ கட்டி வெள்ளியும் எவ்வித மாற்றமுமின்றி சனிக்கிழமை விலையான ரூ.2,40,000 லட்சம் என்ற விலையிலேயே இன்றும் விற்பனையாகி வருகிறது.