தமிழ்நாடு

தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. இல்லாத்தரசிகள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. இல்லாத்தரசிகள் ஹேப்பி!
Gold Rate
உலகளாவிய சந்தை நிலவரங்களின்படி கடந்த சில மாதங்களாகக் கடுமையான உயர்வைச் சந்தித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, சென்னையில் இன்று அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்ச ரூபாயைத் தாண்டி, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. நேற்று கூட சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை அதிரடி சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாற்றமில்லாமல் இருந்த வெள்ளியின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து, ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.10,000 குறைந்து, இன்று ரூ.2,60,000-க்கு விற்பனையாகி வருகிறது.