கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் திட்டம் மற்றும் காலநீட்டிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் இந்திய அருமணல் ஆலைக்குத் தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களைப் பெறுவதற்காக, கிள்ளியூரைச் சுற்றியுள்ள கீழ்மிடாலம், மிடாலம், இனையம் உள்ளிட்ட கிராமங்களில் 1,144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு கடந்த 2020-இல் ஒப்புதல் அளித்த தமிழக அரசு, 11.06.2021 அன்று நில ஒதுக்கீட்டு ஆணையைப் மத்திய அரசு பிறப்பித்தது.
பொதுமக்கள் மற்றும் தென் மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் முடங்கி, அதன் 5 ஆண்டு காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், தமிழக அரசு கடந்த 10.06.2026 அன்று இந்த நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
எதிர்ப்பும் ஆதரவும்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எதிராகக் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும், மண்ணுக்கும் மக்களுக்கும் அபாயம் விளைவிக்கும் இந்த அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தவெக அப்போது வலியுறுத்தியிருந்தது.
ஆனால், தற்போது தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக அதே திட்டத்திற்கு ஆதரவாகக் காலநீட்டிப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு மத்திய அரசின் திட்டத்திற்குத் துணை போவதாகக் குற்றம்சாட்டியுள்ள அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LIVE 24 X 7