தவெக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என சட்டம் ஒழுங்கு விவகாரம் பேசுபொருளானது. இந்த நிலையில், தலைமை செயலாளர், உள்துறை செயலர், காவல் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது முதல்வர், பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளது.

LIVE 24 X 7