தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் ஜோசப் விஜய் உரையாற்றினார்.
தமிழகத்தின் 17-ஆவது சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் காரசாரமாக உரையாற்றினர். இந்நிலையில், இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், த.வெ.க.விற்கு 35% வாக்குகள் அளித்து ஆட்சி அமைக்க வைத்த தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"ஷூட்டிங்கில் இருந்து நேராகச் சட்டமன்றத்திற்கு வந்தது போல் சிலர் எனக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்; அது வெறும் ரீல் தான், ரியல் கிடையாது. மேலும், "எதிர்த்துப் பேசினால்தான் தாங்கள் எதிர்க்கட்சி என்று நிரூபிக்க முடியும் என நினைத்துக் கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கும், பிற உறுப்பினர்களுக்கும் நன்றி. ஒவ்வொரு வீட்டிலும், மக்களின் இதயத்திலும் இடம் பிடித்ததால் தான் நான் முதலமைச்சர் ஆகியுள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
"நான் நடித்த திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி, கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசினேன். அன்றே அரசியல் பேசியதாலேயே எனது படங்கள் சந்தித்த, இப்போதும் சந்தித்து வரும் பிரச்சினைகள் பற்றி எல்லோருக்குமே தெரியும். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலிருந்தே நாங்கள் மக்களுக்குத் துணையாக நின்று வருகிறோம். த.வெ.க. தொடங்கிய உடனேயே சிஏஏ (CAA) திட்டத்தை எதிர்த்து நாங்கள் அறிக்கை கொடுத்தோம்" என்று சுட்டிக்காட்டினார்.
கரூர் சம்பவத்தில் 41 பேரை இழந்த வேதனை என்றும் நம் மனதை விட்டு நீங்காது எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், இச்சம்பவத்தில் தங்கள் மீதே பழி போட்டது கொடுமையானது என்றார். "பேரறிஞர் அண்ணாவின் சாமானியர் ஆட்சியைப் போல, நமது ஆட்சியில் மிக மிகச் சாமானியர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இளைஞர்களால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியவர்களுக்குப் பொருத்தமான பதிலாகத்தான் தற்போதைய நமது இளைஞர்கள் நிறைந்த ஆட்சி அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

LIVE 24 X 7