தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!
Gold Rate
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, கடந்த சில மாதங்களாக ஒரு சவரன் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வரும் வேளையில், இன்றைய விலை சரிவு நடுத்தர மக்களுக்குச் சற்றே நிம்மதியைத் தந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும், ஒரு கிராம் ரூ.13,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,300 என்ற விலையை எட்டியுள்ளது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தாலும், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த சனிக்கிழமை விற்கப்பட்ட அதே விலையிலேயே இன்றும் நீடிக்கிறது. அதன் அடிப்படையில், இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.