தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.480 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.480 உயர்வு!
Gold Rate
கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. அதேநேரம் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, நேற்று அப்படியே சரிந்து ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனையானது. இந்நிலையில், வாரத்தின் நான்காம் நாளான இன்று (மே 21) தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்து நடுத்தரக் குடும்பத்தினருக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவது நகைப்பிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரிவைச் சந்தித்த வெள்ளி

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலை இன்று சற்று சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, சென்னையில் இன்று ரூ.2,90,000-க்கு விற்பனையாகி வருகிறது.