மத்திய அரசின் சுங்க வரி உயர்வு மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களால் கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சிறிய ஆறுதலை அளித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைக்கருத்தில் கொண்டு, தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 வரை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (மே 15) காலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 சரிந்து ரூ.14,950-ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய கடும் விலை ஏற்றத்திற்குப் பிறகு, இன்று விலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.10,000 குறைந்து, இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.305-ஆக உள்ளது.

LIVE 24 X 7