தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் குறித்துப் பல்வேறு புதிய மற்றும் திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன.
திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று கைது செய்யப்பட்ட கணேசன் என்பவர் திமுக ஒன்றிய செயலாளர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் ஓட்டுநர் கிருஷ்ணன் என்பவரின் மூலமாக, கணேசனைப் பயன்படுத்தி உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ விஜய் என்பவரிடம் பேரம் பேச முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுரையில் வைத்து தவெக நிர்வாகி ரகு என்பவர் மூலமாக, தவெக எம்.எல்.ஏ விஜயைச் சந்திக்க கணேசன் அனுமதி பெற்றுள்ளார். அப்போது, தான் கட்சியில் இணைய விரும்புவதாகக் கூறி அறிமுகமாகி, பின்னர் அவரிடம் பேரம் பேசியுள்ளார். ஆனால், அதற்கு இணங்க மறுத்த எம்.எல்.ஏ-வின் உறவினர், அவர்கள் பேசிய உரையாடலை ரகசியமாக ஆடியோ பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ ஆதாரங்களை போலீசாரிடம் தவெக தரப்பு வழங்கியதை அடுத்தே, கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையின்படி, தவெக-வின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-விற்கும் தலா ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலும், இதில் ஈடுபடும் இடைத்தரகர்களுக்குத் தலா ரூ.5 கோடி வரையிலும் ஒதுக்கீடு செய்து பேரம் பேசப்பட்டதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த மாதம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிராக வாக்களிக்கத் தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் திமுக நிர்வாகி கணேசன் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7