தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: நகைப்பிரியர்கள் ஷாக்!
Gold Rate
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,180-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைப் போன்றே நேற்று குறைந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து, இன்று ரூ.2,40,000 லட்சம் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.