தமிழ்நாடு

31 அமைச்சர்கள் பின்னடைவு.. திமுகவினர் அதிர்ச்சி!

துரைமுருகன், சேகர் பாபு, கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவின் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

31 அமைச்சர்கள் பின்னடைவு.. திமுகவினர் அதிர்ச்சி!
DMK Ministers
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 34 அமைச்சர்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 31 பேர் தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, பல தொகுதிகளில் திமுக அமைச்சர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியத் தொகுதிகளின் நிலவரம்

காட்பாடி தொகுதியில் மூத்த அமைச்சர் துரைமுருகன், திருவண்ணாமலையில் ஏ.வ. வேலு ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தலைநகர் சென்னையில் அமைச்சர்கள் சேகர் பாபு (துறைமுகம்) மற்றும் மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோரும் பின்தங்கியுள்ளனர். அதேபோல், தென் மாவட்டங்களில் அமைச்சர்கள் கீதா ஜீவன் (தூத்துக்குடி) மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) ஆகியோரும் பின்னடைவில் உள்ளனர். திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோவி. செழியனும் பின்னடைவைச் சந்தித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அரசியல் மாற்றம்

சென்னை உள்ளிட்ட முக்கிய மண்டலங்களில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வரும் சூழலில், திமுகவின் இந்தத் தொடர் பின்னடைவு ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, பெரும்பாலான அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வெற்றியைத் தக்கவைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.