விளையாட்டு

IND vs NZ: இக்கட்டான சூழலில் நமன் தீரின் மாஸ் CAMEO.. 17 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய நமன் தீர், இர்பான் பதானின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

IND vs NZ: இக்கட்டான சூழலில் நமன் தீரின் மாஸ் CAMEO.. 17 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு!
Naman Dhir

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 7-வது வரிசை அல்லது அதற்குப் பின் களமிறங்கி வெற்றிகரமாக ரன் சேஸ் செய்த இந்திய வீரர்களில் அதிக ரன்கள் விளாசி இளம் வீரர் நமன் தீர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2009-ல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக இர்பான் பதான் அடித்த 33 ரன்களே சாதனையாக இருந்த நிலையில், அதை நம்மன் தீர் முறியடித்துள்ளார்.

கடினமான சூழலில் அதிரடி ஆட்டம்

இந்திய அணி 167/5 என்ற நிலையில் தடுமாறியபோது களமிறங்கிய நமன் தீர், 33 பந்துகளில் 59 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மிட்செல் சாண்ட்னர் வீசிய 17-வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து ஆட்டத்தை இந்தியப் பக்கம் திருப்பினார். தொடர்ந்து நாதன் ஸ்மித் ஓவரிலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி, கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலைக்கு அணியைக் கொண்டு வந்தார்.

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

19-வது ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த போதிலும், பதற்றமின்றி ஆடிய நமன் தீர் மேட் ஹென்றி வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். வெறும் 15 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நமன் தீரின் பந்துவீச்சு அணிக்குக் கூடுதல் பலம் தருவதாகவும், இக்கட்டான சூழலில் அவர் காட்டிய அமைதியும் ஆட்டமும் மிகவும் அற்புதமாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார்.

அதிரடி தொடக்கம்

முன்னதாக சஞ்சு சாம்சனின் சிறப்பான தொடக்கத்தால் பவர் பிளேயில் இந்திய அணி 94/1 என பலமான நிலையில் இருந்தது. ஆனால் நடுஓவர்களில் மிட்செல் சாண்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் சுழலில் சிக்கி, 7 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் (42) மற்றும் நமன் தீர் (42*) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி வரும் சனிக்கிழமை (அக்.24) இதே ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.