IND vs NZ: மவுண்ட் மவுங்கானுயில் மிரட்டும் MATT HENRY.. ஒரே ஓவரில் இந்திய STAR PLAYERS காலி!

IND vs NZ: மவுண்ட் மவுங்கானுயில் மிரட்டும் MATT HENRY.. ஒரே ஓவரில் இந்திய STAR PLAYERS காலி!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழக்க, இந்திய அணி கடும் சரிவை சந்தித்துள்ளது.

Author: Christon mano விளையாட்டு

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்குள்ள மவுண்ட் மாங்கானுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, வில் யங்கின் அருமையான சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 333 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 334 ரன்கள் என்ற இலக்கை நோக்கித் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கமே மரண அடி கிடைத்தது. ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்க ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார் என்று பார்த்தால், ரோகித்துடன் இணைந்து களமிறங்கியதே ரசிகர்களுக்கு முதல் ஷாக்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா, லேசாகத் தட்டி ஆட முயன்றார். ஆனால், பந்து பேட்டின் எட்ஜில் பட்டு ஃபின் ஆலன் கையில் தஞ்சமடைந்தது. தான் என்ன ஆனோம் என்றே புரியாமல் ரோகித் அதிர்ச்சியில் உறைந்துபோய் மைதானத்தை விட்டு வெளியேறினார். ரசிகர்கள் நடந்ததை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குள், அடுத்து வந்த விராட் கோலி 4 பந்துகளை டாட் வைத்துவிட்டு, 5-வது பந்தில் போல்டாகி நடையைக் கட்டினார்.

இரண்டு நட்சத்திர வீரர்களின் விக்கெட்டைப் பார்த்துப் பதறிப்போன ரசிகர்களுக்கு, அடுத்த பந்திலேயே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதல் ஓவரின் கடைசிப் பந்தில் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார்.

இதில் 6வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டும் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இப்படி மேட் ஹென்றியின் அச்சுறுத்தலான பந்துவீச்சில் இந்திய அணி ஒரே ஓவரில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

மூன்று முன்னணி வீரர்களும் ரன் கணக்கைத் தொடங்காமலேயே பெவிலியன் திரும்பியதால் இந்திய ரசிகர்கள் விரக்தியின் உச்சத்தில் கேலரியில் அமர்ந்துள்ளனர். தற்போது இஷான் கிஷனும் அக்சர் படேலும் களத்தில் போராடி வருகின்றனர். இவர்களுக்குப் பிறகு பெரிதாக பேட்டிங் பலம் இல்லாததால், இந்த ஜோடியின் ஆட்டத்தை நம்பியே இந்திய அணி பரிதாப நிலையில் உள்ளது.