விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலக சாதனை படைத்த மெஸ்ஸி!
டல்லாஸ் நகரில் நடந்த 'ஜெ' பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டார். உலகக் கோப்பை வரலாற்றில் அவர் பெனால்டியைத் தவறவிடுவது இது 3-ஆவது முறையாகும். எனினும், இதனையடுத்து 38-ஆவது நிமிடத்தில் சக வீரர் மெடினா கொடுத்த பந்தை மெஸ்ஸி கோலாக மாற்றினார்.
இந்த கோல் மூலம், உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான ஜெர்மனியின் முன்னாள் வீரர் மிராஸ்லாவ் குளோசின் (16 கோல்கள்) சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் அபார வெற்றி!
பிலடெல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஈராக் அணிகள் மோதின. போட்டியின் 14-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் இடையே பலத்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ரசிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 54-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே தனது 2-ஆவது கோலையும், 66-ஆவது நிமிடத்தில் உஸ்மானே திம்பலி அணியின் 3-ஆவது கோலையும் அடித்தனர்.
இறுதியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஈராக் அணிக்கு ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பிரான்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது; ஈராக் அணி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

LIVE 24 X 7