இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல். அவருக்கு பதிலாக இந்திய ஆடவர் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் .
இந்தியா அணி கடந்த ஜூலை மாதம், இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடியது. அந்த தொடரின் போது ஜஸ்பிரித் பும்ராவின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
சுபமன் கில் தலைமையில் இந்த மாதம் 14-ஆம் தேதி இந்தியா இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடவுள்ளது . தற்போது அந்த தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாததாலும், காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இலங்கை டெஸ்ட் தொடரில் முதலில் சேர்க்கப்பட்ட பும்ரா தற்போது நீக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆகிப் நபி கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசன்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக, 2025-26 ரஞ்சி கோப்பை சீசனில் மட்டும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வெல்ல முக்கியப் பங்காற்றினார். அதனால்தான், "ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி முதன்முறையாக மூத்த தேசிய டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளார்," என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் இதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரா மாலிக் ஆகியோருக்கு பிறகு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த 29 வயதான நபி மூத்த இந்திய தேசிய அணிக்கு தேர்வாகும் மூன்றாவது வீரர் ஆவார். இந்தியா ஒருநாள் மற்றும் டி20 களில்(குறைந்த ஓவர் பார்மட்) விளையாடியுள்ள பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரன் மாலிக் இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடாத நிலையில், இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடும் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் ஆவார்.
இலங்கை மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், ஆகிப் நபி புதிய பந்தில் ஸ்விங் உருவாக்கும் திறன் மற்றும் கட்டுக்கோப்பான பந்து வீசும் திறன் கொண்டுள்ளதால் பும்ராவிற்கு பதிலாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான மாற்றி அமைக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரன்ஷ் ஜெயின் மற்றும் ஆகிப் நபி.

LIVE 24 X 7