சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெறப்பட்ட பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஒப்பந்ததாரர் முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் தனவிமல் இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் தனவிமல் தெரிவித்துள்ளதாவது, "கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த போது, அன்றைய மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்னை மொபைலில் தொடர்புகொண்டார். தேர்தல் செலவு செய்யும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி தருமாறு வலியுறுத்தியதுடன், வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தார்.
அவரது வழிகாட்டுதலின்படி, ரூ.4 கோடியே 50 லட்சத்தைத் திரட்டி ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசனிடம் கொடுத்தேன். வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கப்பட்டதும் பணத்தைக் கேட்டபோது ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள தொகையைத் தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்தனர்."
தற்போது சி.விஜயபாஸ்கர் ஆளும் தவெகவில் இணைந்துள்ள நிலையில், எஞ்சிய பணத்தைக் கேட்டபோது தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7