தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்க தங்கம் தென்னரசு தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது பரிந்துரை அறிக்கையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
110 மாவட்டங்களாக அதிகரிப்பு
முன்னதாக 78 மாவட்டக் கழகங்கள் இருந்த நிலையில், நிர்வாக வசதிக்காக மாவட்டங்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த திமுக முடிவு செய்தது. மேலும், நகரப் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நகரச் செயலாளர் என்றும், ஒன்றியப் பகுதிகளில் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்றும் கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் ஒரே பதவியில் 2 முறை மட்டுமே நீடிக்க முடியும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, ஒருவர் அதிகபட்சம் 3 முறை மாவட்டச் செயலாளர் பதவியில் நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கட்சிப் பதவிகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் வயது வரம்பு தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 70 வயதைக் கடந்துள்ள 13 மாவட்டச் செயலாளர்களுக்கு ஓய்வு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய நிர்வாக அமைப்பில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், பெண்களுக்கும் கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்படும் மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதமும், பெண்களுக்கு 10 சதவீதமும் பிரதிநிதித்துவம் வழங்குவது உள்ளிட்ட பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட 110 மாவட்டங்களுக்கான பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

LIVE 24 X 7