தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் நீடித்து வந்த உள்கட்சிப் பிளவின் உச்சகட்டமாக, அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் இன்று (மே 25) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்த நிலையில், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக, தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரண்டாக உடைந்தது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இ.பி.எஸ்-ஸை எதிர்த்து, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து இ.பி.எஸ் நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து, கொறடா மற்றும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் இன்று சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பின் போது, எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய மூன்று பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதங்களைச் சபாநாயகரிடம் முறைப்படி வழங்கினர். பின்னர், தலைமைச் செயலகத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்த மூவரும் தங்களை முறைப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த அதிரடி ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஒட்டுமொத்த பலம் 47-லிருந்து தற்போது 44 ஆகக் குறைந்துள்ளது. தவெக-வில் இணைந்துள்ள இந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்களும், வரவிருக்கும் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படவுள்ள தங்களது சொந்தத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், தவெக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7