கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காலத்தில் தொடங்கிய திமுக - மதிமுக அரசியல் நெருக்கம், சுமார் ஒன்பது ஆண்டுகளாக நீடித்த இந்த கூட்டணி தற்போது முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு நேரில் சென்று வைகோவை சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் விஜய்யை நேரில் வரவேற்ற துரை வைகோவின் நடவடிக்கைகளும் அரசியல் கவனத்தை ஈர்த்தன.
மேலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் மதிமுக தரப்பினர் பங்கேற்று வந்ததும், தவெக அரசுடன் மதிமுக இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், தவெக அரசின் மூத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று ஜுன் 16 மாலை வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்திருப்பது புதிய ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமா அல்லது கூட்டணி அரசியலின் அடுத்த அத்தியாயத்துக்கான முன்னோட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மற்றொரு பக்கம், மதிமுக கூட்டணியில் இருந்து விலகினால், அக்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்னவாகும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த சில கட்சிகள் விலகியுள்ள நிலையில், மதிமுகவும் அதே பாதையைத் தேர்வு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.
"வைகோவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?" என்ற கேள்விதான் தற்போது தமிழக அரசியலில் அதிகம் பேசப்படும் விவாதமாக மாறியுள்ளது.

LIVE 24 X 7