தமிழ்நாட்டின் சட்டசபை நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்தான விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தொடலில் செங்கோட்டையன் பேசுகையில் ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றார்கள் என்று கூறினார். இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம் அதனை உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தெரிவித்து, ஆதவ் சன்ன ரகம் அரிசியை விளைவிக்கக் கூடிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை கொடுக்க உள்ளதாக அறிவித்தார்.
ஆதவ் கூறியதற்கு சன்ன ரக அரிசியை எப்படி விளைவிக்க முடியும் என்று கே.என்.நேரு கேள்வி எழுப்பிய போது, அதற்கு ஆதர் அர்ஜுனா கே என் நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அவற்றிலேயே நெல் விளைவித்து கொள்கிறார். ஆனால் பாமர மக்கள் ரேஷன் கடையில் தான் அரிசி வாங்குகிறார் என்று கூறிய போது, அதற்கு பதிலளித்த கே. என். நேரு சன்ன ரக நெல்லை நாம் எப்படி விளைவிக்க முடியும் அது அதிகளவில் கிடைப்பதில்லை. ஆந்திரா பொன்னி போன்ற சில அரிசி ரகம் மட்டுமே இங்கு கிடைக்கின்றன. அதனால் சன்ன ரகம் பட்டத்தில் தான் பெற முடியும் தவிர அவற்றை வெளியில் இருந்து தான் வாங்க முடியும்.
மேலும் சன்ன ரகத்தை தாளடி பட்டத்தில் தான் உருவாக்க முடியும் என்றும் நவறை பட்டத்தில் சன்ன ரகம் போட்டால் விளைச்சல் அதிகம் வராது என்றும், இதன் மூலம் விவசாயிகளுக்கு தான் அதிக நஷ்டம் ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
அதேபோல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன் என்று கூறினார் ஆதவ், எவ்வளவு நிலம் வைத்திருந்தாலும் சாப்பிட முடிவதை தான் சாப்பிட முடியும். சக்கரை நோய் இருப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டால் தான் குறையும் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ள நலையில் அதன் காரணமாகவே ரேஷன் அரிசியை சாப்பிடுகிறேன். இதனை விளக்கமாகவே சொல்கிறேன். நாங்கள் உற்பத்தி செய்து கொடுப்பததால் தான் உங்களை போன்றோர் அதனை சாப்பிட்டு வருகின்றீர்கள்.
மேலும் விவசாயம் தொடர்பாகவும் சன்ன ரக அரிசி தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசிய பேச்சு தவெகவினர் மத்தியில் தற்போது கவனத்தை பெற்றுள்ளது.

LIVE 24 X 7