இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும், அவருடன் கே.பி. முனுசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷாவுடன் சந்திப்பா?
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து, அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்” என தெரிவிக்கப்பட்டது. மேலும், அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களையும் அவர் சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் பழனிசாமியும், அமித் ஷாவும் சந்திப்பது இயல்பானது” என்று தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7









