ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் கோடை காலத்தில் நீர் குறையும்போது. வற்றிய இடங்களில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு இந்த மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை அள்ளும் விவசாயிகளிடம் யாரும் பணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவே உள்ளது.
இதற்கு முன்பிருந்த ஆட்சிகளில் இதில் முறைகேடுகள் நடைபெற்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகள் உச்சம் தொட்ட நிலையில். 14.06 2024 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் 'வண்டல் மண்ணிலும் பலே சுரண்டல்.விவசாயிகளிடம் அர்ச்சனை வாங்கும் தி.மு.க.' என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த இதழ் வெளியான உடனேயே அன்றைய முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி வண்டல் மண்ணை இலவசமாக மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மண் எடுக்க சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலம் ஆன்லைன் வழியே அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் பிறகு வண்டல் மண் ஊழல் கட்டுக்குள் வந்தது. ஆனால், தற்போது மீண்டும் பவானிசாகர் அணையை மையமாக வைத்து வண்டல் மண் ஊழல் புகார் வெடித்துள்ளது இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளரான நடராஜ், "வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ள மாநிலம் முழுக்கவே விவசாயிகளுக்கு அனுமதி உண்டு ஆனால் எல்லா நேரங்களிலும் அள்ள முடியாது அணையில் வண்டல் மண் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ந்தால் மட்டுமே அள்ள முடியும்.
ஆனால், இதிலும் முந்தைய ஆட்சியில் ஊழல் நடைபெற்றது. புதிய ஆட்சியிலாவது மாற்றம் வரும் என பார்த்தால் தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. அரசுத் துறை புள்ளிகளுடன் கைகோத்துக்கொண்டு பவானிசாகரில் த.வெ.க.வினரும் ஒரு ளோடுக்கு நூறு ரூபாய் வருவிக்கின்றனர். சமயங்களில் இருாறு. முந்நூறுகூட பிடுங்குகின்றனர். தினமும் பல நூறு வண்டிகளுக்கு அனுமதி கொடுக்கின்றனர்.
லஞ்சம் கொடுத்து எடுத்துச் செல்லும் இந்த மண்ணை விவசாயிகள் அல்லாத யார் யாருக்கெல்லாமோ ஒரு லோடு ரெண்டாயிரம் மூவாயிரம். ஐந்தாயிரம் வரை லாரிக்காரர்கள் விற்பனை செய்கின்றனர். ஆக இவ்வளவு சம்பாதிப்பவர்கள், லோடுக்கு நூறு என்ன ஐநூறு கொடுக்கவும் தயாராக உள்ளனர். நோகாமல் குவியும்
இந்தப் பணமானது ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் சிலரை சபலமாக்கியுள்ளது. அதனால்தான் முறைகேடான இந்த மண் அள்ளலுக்கு கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் செய்கிறார்கள். விளைவு, அணையை சுற்றியிருக்கும் பல சாலைகளில் லோடு லாரிகள் பேயாக பறக்கின்றன. எந்த உயிரை இவர்கள் தூக்கப்போகிறார்களோ தெரியயில்லை.
பவானிசாகர் முதல் சத்தியமங்கலம், சிறுமுகை பண்ணாரி என பல வழிகளில் தற்போது கள்ள லோடு லாரிகளின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. முறைகேடாக மண் அள்ளும் லாரிகளின் பாய்ச்சலால் விபத்துகள் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் நாசமாகி ரோடும் பாழாகி வருகிறது. எங்களது ஆதங்கத்துக்குப் பிறகு அரசுத் துறைகள் சில உத்தரவுகளைப் போட்டுள்ளன. ஆனால் அது வெறும் கண்துடைப்பாக மட்டுமே உள்ளது. இதுபோக தற்போது புதுவகை ஊழல் ஒன்றையும் துவங்கியுள்ளனர்.
'விவசாயிகள் மட்டுமே மண் அள்ள அனுமதி என அரசு மீண்டும் அறிவித்திருக்கும் நிலையில் மண் அள்ள நாங்கள் சொல்லும் ஜே.சி.பியை நான் பயன்படுத்த வேண்டும்' என த.வெ.க புள்ளிகள் சிலர் நிர்பந்திக்கிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை மணல் கொள்ளையால் எப்படி காவிரி ஆறு காலியானதோ அதே நிலைக்கு பவானிசாகர் அணையும் சென்றுகொண்டிருக்கிறது.
மேலும், பழைய அரசாங்கத்தின் நடைமுறையான ஆன்லைனில் அனுமதி பெறுவதை ஓரங்கட்டிவிட்டு, துண்டுச் சீட்டில் அனுமதி கொடுக்கின்றனர். வண்டல் மண்ணில் வண்டி வண்டியாக குவியும் பணம் யார் யார் பாக்கெட்டுக்கு போகிறது என முதல்வர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோபமாக
கள்ளத்தனமாக வண்டல் மண்ணை வாரிச்செல்லும் லாரிகளால் மனிதர்களுக்கு மட்டுமல்ல வன விலங்குகளுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் அடங்கும் இப்பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். இங்குதான் லாரிகளின் அராஜகம் அத்துமீறுகிறது.
இதுகுறித்து சிறுமுகை பொறுப்பு வனச்சரகரான சசிக்குமாரிடம் பேசினோம். "அனுமதி அளிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் லாரிகள் செல்லக்கூடிய சாலைகளை அடைக்கிறோம் ஆனால் இரவு அணைப் பகுதிக்குள் லாரிகள் ஊடுருவுகின்றன. இவர்களால் சென்சிடீவான வன விலங்குகளுக்கு என்றார். பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "முறைகேடுகளை தீவிரமாக கண்காணித்து ஒடுக்குகிறோம் என்றனர் கோரஸ் பாடுவதுபோல!
வருவாய்த்துறை அமைச்சரும். தவெக. தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையனிடம் இப்பிரச்னைகளை கொண்டு சென்றபோது, "அற்புதமான பவானிசாகர் அணையை வைத்து சுடந்த ஆட்சியில் முறைகேடாக பணம் சம்பாதித்தனர். அந்தப் போக்கு தற்போது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் சொல்லை மீறி ஐந்து பைசா அளவில் தப்பு பண்ணக்கூட த.வெ.க.வினருக்கு தைரியம் வராது. இருந்தாலும் வண்டல் மண் விவகாரங்களை மீண்டும் விசாரிக்கிறேன்" என்றார்.
த.வெ.க ஆட்சியிலாவது இயற்கை வளம் கொள்ளை போவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

LIVE 24 X 7