மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் வேளையில், முதல்வர் மமதா பானர்ஜி தனது தொகுதியில் கடும் போராட்டத்திற்குப் பிறகு முன்னிலை பெற்றுள்ளார்.
மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக வலுவான முன்னிலையைப் பெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, பாஜக 177 தொகுதிகளிலும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 107 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் இதுவரை எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறாத நிலையில், இடதுசாரிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
பவானிபூர் தொகுதியில் திருப்பம்
பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், மூன்றாவது சுற்று முடிவில் முன்னிலை பெற்றுள்ளார். இந்தச் சுற்றின் இறுதியில் மமதா 9,359 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி 8,461 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் மமதா பானர்ஜி 898 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
சுவேந்து அதிகாரியின் நிலை
எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பவானிபூர் மற்றும் நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் களம் கண்டுள்ளார். ஒட்டுமொத்த மாநில அளவில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன.

LIVE 24 X 7