தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை விசாரித்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சாகலி ரஜிதா (38) என்ற பெண் மற்றும் அவரது மைனர் மகனைக் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ராமக்கபேட்டை கிராமத்தில் பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மாயமானவர்கள் பட்டியலை வைத்து ஆராய்ந்ததில், உயிரிழந்தவர் பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அதிகம்ப விஜயா என அடையாளம் காணப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது, கொலையாளிகள் உடலைப் பையில் அடைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அடர்ந்த காட்டுப் பகுதிக்கு உடலைக் கொண்டு செல்லத் திட்டமிட்டவர்கள், மழை காரணமாக நடைபாதையிலேயே பெட்ரோல் ஊற்றி உடலைக் கொளுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில், தனியாக வசித்து வந்த விஜயாவைத் தங்களது மளிகைக் கடைக்கு அழைத்து தாய்-மகன் இருவரும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் அவரது நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்றுக் கொண்டு, 10 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து உடலை எரித்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த மே மாதம் இதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண் மாயமான வழக்கிலும் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை ஆசைகாட்டி அழைத்துச் சென்று கொன்று, அச்சமய்யப்பள்ளி காட்டுப்பகுதியில் உடலை எரித்துள்ளனர்.
மேலும், கடந்த 2025 ஜூன் மாதம் நடைப்பயிற்சி சென்ற அன்னபூர்ணா என்பவரைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பெண் இன்னமும் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதானவர்களிடமிருந்து 5.6 சவரன் தங்க நகைகள் மற்றும் 53 சவரன் வெள்ளிப் பொருட்களைப் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தனிமையில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து இவர்கள் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும், மேலும் 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் சித்திபேட்டை காவல் ஆணையர் ரஷ்மி பெருமாள் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரேணுகா மாயமான வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட போது, அவர் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வந்ததைச் சுட்டிக்காட்டி போலீசாரின் சந்தேகத்திலிருந்து இத்தாய்-மகன் தப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7