இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் காகித நோட்டுகள் விரைவில் கிழிந்துவிடுவதால், அதற்கு மாற்றாகப் பிரத்யேக பிளாஸ்டிக் - பாலிமர் தாள்களை சப்ளை செய்யுமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள சர்வதேச நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் விரைவில் சேதமடைய வாய்ப்புள்ள 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளைத்தான் முதற்கட்டமாக பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றிச் சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போதைய காகித ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாமல் போகாது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காகித நோட்டுகளும், புதிய பிளாஸ்டிக் நோட்டுகளும் சந்தையில் ஒரே நேரத்தில் சமமாகவே புழக்கத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் காகித நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7