அண்மை

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு!
Vijay & Sangeetha Case
நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சசிகலா முன்னிலையில் நான்காவது வழக்காக இது எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பிப்ரவரி 26-ஆம் தேதி முதல்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இதன் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு, தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கும் விஜய்க்குத் தனிப்பட்ட ரீதியில் ஒரு சவாலாகப் பார்க்கப்பட்டது.