நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நஸ்ரியா, நஸ்லன் ஆகியோருடன் சூர்யா இணைந்து நடிக்கும் அவரது 47-வது படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தயாராகி வந்தனர். இந்நிலையில்தான், நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை முன்னிட்டு, தனது பிறந்தநாளை எவ்விதத்திலும் கொண்டாட வேண்டாம் என அவரது ரசிகர் மன்றம் சார்பில் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் விதமாகவே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7