தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டி நடிகர் யாஷ் டாக்ஸிக் பட விழாவில் பேசியது கவனம் பெற்றுள்ளன. தமிழ்நாடு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அன்பை தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட்டு வருவதாகவும் யாஷ் தெரிவித்துள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் யாஷ், தமிழக மக்கள் தனக்கு தொடர்ந்து அளித்து வரும் அன்பை நினைவுகூர்ந்ததுடன், தமிழ், கன்னடம், தெலுங்கு என மொழிகளைக் கடந்து சினிமா என்பது இந்திய சினிமா என்ற உணர்வுடன் தான் இருப்பதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் குறித்து பேசிய யாஷ், “விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழ்நாடு மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். விஜய் மீது தங்களுக்கு இருக்கும் பாசத்தை மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், "மக்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்புக்கு அவர் தனது கடமைகள் மூலம் பதிலளித்து வருகிறார்" எனவும் யாஷ் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும்போது தமக்கே வியப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பணிகள் குறித்து தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் அடிக்கடி கூறும் கருத்தையும் யாஷ் தனது பேச்சில் குறிப்பிட்டார். விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றி வருவதாக வெங்கட் நாராயணன் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு உரிய வகையில் விஜய் செயல்படுவதை அறிய முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் வழக்கமான அரசியல் முறைகளில் இருந்து மாறுபட்ட ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகி வருகிறது" என்றும் யாஷ் கூறினார். இதுபோன்ற மாற்றங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு தேர்தல் வெளிப்படையாக நடைபெற்றதாகவும், தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் விஜய்க்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருப்பது புரிகிறது என்றும் யாஷ் தெரிவித்தார்.
"முதலமைச்சர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுவதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது" என்றும்,
"தமிழ்நாடு மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர், தமிழகத்தில் உருவாகும் இந்த அரசியல் மாற்றத்தை உலக அரசியலும் கவனிக்க வேண்டும்" என்றும் யாஷ் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
‘டாக்ஸிக்’ திரைப்பட விழாவில் நடிகர் யாஷ் தெரிவித்த இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

LIVE 24 X 7