சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'கர' திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கர’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'கர' திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Kara
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘கர’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'போர் தொழில்' திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர’. இப்படம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதிலும், ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது.

இதனால் வணிக ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல், உலகளவில் சுமார் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துத் தோல்விப்படமாக அமைந்தது. தனுஷ் ரசிகர்களிடையேயும் இப்படம் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.

திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற மே 28-ஆம் தேதி 'கர' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இத்திரைப்படம் தமிழ் மட்டுமன்றி, இதர பான் இந்திய (Pan-India) மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.