சினிமா

Avengers Doomsday Trailer: தானோஸை மிஞ்சும் வில்லனாக அயர்ன் மேன்...!

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்திக் டிரெய்லர் வெளியாகி தற்போது இணையத்தில் டிரெங்கில் உள்ளது.

Avengers Doomsday Trailer: தானோஸை மிஞ்சும் வில்லனாக அயர்ன் மேன்...!
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் உயிரிழப்பது போல் இறுதியாக காட்டப்பட்டிருக்கும்.ஆனால் தற்போது டூம்ஸ்டே டிரெய்லரில் அயர்ன் மேன் கதாபாத்திரம் கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டிரெய்லர் மூலம் மார்வெல் உலகில் நுழைந்துள்ளார்.அதில் தான் ரசிகர்களுக்கு மிகப்பெரும டுவிஸ்ட் காத்திருக்கிறது. இதுவரை டோனி ஸ்டார்க்காக கலக் வந்த அயர்ன் மேன் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். அயர்ன் மேன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஜோ ரூஸோ பேசுகையில் அவர் சாதாரண வில்லன் கிடையாது மார்வல் யுனிவர்சில் மிகக் கடினமான வில்லன்களின் ஒருவர் என்று அந்த கதாபாத்திரத்தை பற்றி கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

மார்வெல் யுனிவர்சில் அயர்ன் மேன் முக்கிய சூப்பர் ஹீரோவாக வலம் வரும் நிலையில் டூம்ஸ்டே படத்தில் கொடூர வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் நடிகர் கிறிஸ்டியன் எவான்ஸ் மீண்டும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

'ஃபெண்டாஸ்டிக் ஃபோர்', 'தண்டர்போல்ட்ஸ்' கதாபாத்திரங்களுடன், 'தோர்', 'எக்ஸ்-மேன்' உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிரெய்லரில் ஸ்பைடர் மேன் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், 2019-ல் வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் செப்டம்பரில் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் 'டூம்ஸ்டே' படத்திற்கான 7 நிமிட முன்னோட்டக் காட்சிகள் இடம்பெறவுள்ளன. ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் வரும் டிசம்பர் 18 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.