தாக்குதல் சம்பவம்.. மீனவர்கள் வேலை நிறுத்தம்
நாகை கோடியக்கரை அருகே பைபர் படகு மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை கோடியக்கரை அருகே பைபர் படகு மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.
Nepal Landslides : கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே ராவத்துநல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.