K U M U D A M   N E W S
Advertisement

Author : MUTHUKRISHNAN MURUGAN

’டைப் காஸ்ட்’ பிரச்னையில் சிக்கியிருப்பதில் நானும் ஒருவர்- விக்ரம் பிரபு!

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பவர்களை ‘டைப் காஸ்ட்டிங்’ என சினிமாத்துறையில் அழைப்பதுண்டு. நானும் ஒரு டைப் காஸ்ட் ஹீரோ பிம்பத்தில் இருக்கிறேன், அதனை உடைக்க முயல்கிறேன் என விக்ரம் பிரபு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ரூட்டில் கமலாலயம்.. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு எப்போது?

புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர மேயரை மதிக்காத கவுன்சிலர்கள்- செம கடுப்பில் அறிவாலயம்!

மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

100-க்கு 257 மார்க்.. ஆனாலும் பெயில்: பீகார் பல்கலைக்கழக ரிசல்ட் பரிதாபம்!

பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓரணியில் தமிழ்நாடு: மக்களிடம் கேட்கப்படும் 6 கேள்வி.. திமுகவின் பலே ஐடியா

2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.

இவரெல்லாம் வாத்தியாரா? 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.