அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதலில், ஈரானின் 131 நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் ரெட் கிரசண்ட் ) அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் ரெட் கிரசண்ட் அறிக்கை
ஈரான் ரெட் கிரசண்ட் சொசைட்டி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும், குறிப்பாக மினாப் (Minab) பகுதியில் உள்ள ஒரு சிறுமியர் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தலைவர்கள் இழப்பும் ஈரானின் பதிலடியும்
தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகளும் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்காவின் ராணுவ தளங்கள் கொண்ட நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மழையைப் பொழிந்து வருகிறது.
முடங்கிய வளைகுடா நாடுகள்
ஈரானின் பதிலடித் தாக்குதலால் துபாய், அபுதாபி, தோஹா மற்றும் குவைத் நகரங்களில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகம் தாக்கப்பட்டதாகவும், சவுதி அரேபியாவின் 'ராஸ் தனூரா' (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமுமே போர்க்களமாக மாறியுள்ளது.
ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சுமார் 1 லட்சம் மீட்புப் பணியாளர்கள் மற்றும் 40 லட்சம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

LIVE 24 X 7