காசா பகுதியில் 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய போரில் இதுவரை, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொடர்ந்த தாக்குதல்களால் காசா பகுதியில் மின்சாரம், தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அகதிகளின் எண்ணிக்கையும் ஏறக்குறைய 20 லட்சத்தை கடந்துவிட்டதாக யுஎன் தகவல்கள் கூறுகின்றன.
போருக்கு உடனடி முடிவை காண வேண்டுமென பல்வேறு நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் இரு தரப்பினரும் வன்முறையை நிறுத்த தயாராக இல்லை என்பது சிக்கலான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சமுதாயம் இந்தப் போருக்கு முடிவை காண வேண்டியது அவசியமாகியுள்ளது.
LIVE 24 X 7









