புதிய போப்பை தேர்ந்தெடுக்க 71 நாடுகளை சேர்ந்த 133 கார்டினல்களும், ரோம் நகரில் உள்ள வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் கான்க்ளேவ் மாநாட்டில் பங்கேற்றனர். இதில் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், தேவாலயத்தில் இருண்டு கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து 2-வது நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது. மேலும், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன. தொடர்ந்து, கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரோவேஸ்ட் வயது (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த இவர், பெருவில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் வாடிகனின் 267 போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று அவர் கத்தோலிக்க திருச்சபையின் 267வது போப்பாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் இன்று முதல் அவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
LIVE 24 X 7









