பைடன் மற்றும் அவரது குடும்பம், மருத்துவ குழுவுடன் சேர்ந்து சிகிச்சை விருப்பங்களை பரிசீலித்து வருகின்றனர். அவரது மருத்துவ வரலாற்றில், கடந்த 2023-ம் ஆண்டு, சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த பாஸல் செல் கார்சினோமா உட்பட சில சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த புற்றுநோய் அவரது எலும்புகளுக்கு பரவியிருப்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவரது உடல் நலனை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேநேரம் தற்போது பைடன் நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பைடன் நலமாக இருப்பதாகவும், அவர் தன்னம்பிக்கையுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மருத்துவ அறிக்கையில் அவருக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் பைடன் தற்போது சீரான நிலைக்கேற்ப இருக்கிறார் எனவும், அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தச் செய்தியைக் கேட்டு தாமும் தமது மனைவி மெலனியாவும் வருத்தமடைந்ததாக அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோபைடன் விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தமது சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









