இதனால் அடிக்கடி கீழ் தளத்தில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று ரேவதி பேசுவது, பழகுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதைபோல இன்று மதியம் ராஜேஸ்வரி வீட்டில் யாரும் இல்லை என்பதும் அவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டும் இந்திரா சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்பது போன்று நடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென இந்திரா, 81 வயது மூதாட்டியான ராஜேஸ்வரி கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல்கள் மற்றும் கம்மலை கொள்ளையடிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கூச்சலிட்டார்.
உடனே அருகில் வசித்து வரும் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து இந்திராவை மடக்கி பிடித்தனர். மேலும் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராவை கைது செய்தனர். கொள்ளையடித்த சுமார் 10 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கழுத்து நெரிக்கப்பட்டதால் மூதாட்டி ராஜேஸ்வரி காயத்துடன் மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார். போலீசார் அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கைதான இந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









