தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஜனவரி 10) வலுவிழந்த நிலையில், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 'மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை' சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நகர்வு
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது இது சென்னைக்கு 450 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலைக்குள் இலங்கை அருகே யாழ்ப்பாணம் - திரிகோணமலை இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாகத் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை): மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை: ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (ஜன.11) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7