சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக நிலவும் மாற்றங்களால் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 38 டிகிரி செல்ஸியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாக வாய்ப்புள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாக நேரிடும்.
இயல்பை விட அதிகமாகும் வெப்பம்
ஏப்ரல் 19-ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி பகுதியில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிக ஈரப்பதம் நிலவுவதால், மக்களிடையே ஒருவித அசௌகரியமான சூழல் மற்றும் அதீத வியர்வை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு
வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், ஏப்ரல் 21-ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

LIVE 24 X 7