தமிழ்நாடு

தோழர் நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை: 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

தோழர் நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை: 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி!
Nallakannu
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

72 குண்டுகள் முழங்க மரியாதை

இறுதிச் சடங்குகள் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மறைந்த தலைவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்துத் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது முன்னிலையில், தமிழக காவல்துறையினரின் சார்பில் நல்லகண்ணுவுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க, காவல்துறை இசைக்குழுவினரின் மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதி ஊர்வலம்

இதனைத் தொடர்ந்து தி.நகர் பாலன் இல்லத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மேலும், நல்லகண்ணு அவர்களின் விருப்பப்படி அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி பிரியாவிடை அளித்தனர்.