தமிழ்நாடு

Gold Rate: இரண்டாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

Gold Rate: இரண்டாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை!
Gold Rate
சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாகத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்றத்தைச் சந்தித்து வந்தது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து இருபத்தாறு ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று தொடங்கிய விலைச் சரிவு இன்றும் நீடிக்கிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,25,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் கணக்கில் பார்த்தால், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,560-க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.920 வரை குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.80 சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றமில்லாத வெள்ளி விலை

தங்கம் விலை இரண்டாவது நாளாகச் சரிவைச் சந்தித்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போர் சூழல் காரணமாகத் தொழில்துறை ரீதியாக வெள்ளிக்கான தேவை நிலையாக இருப்பதால் இதன் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை எனக் கருதப்படுகிறது.