சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, கடந்த ஓராண்டில் பல மடங்கு உயர்வைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை மீண்டும் ஒரு பெரும் ஏற்றத்தைக் கண்டு, நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
நேற்றைய விலை நிலவரம்
நேற்று (ஜனவரி 9) தங்கம் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,400-க்கும் விற்பனையானது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,68,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சவரன் விலை அதிரடி உயர்வு
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று, தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,03,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு, தங்க முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெள்ளி விலை ஏற்றம்
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறிப்பிடத்தக்க ஏற்றத்தைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிலோவுக்கு ரூ.7,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7