தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!
Chennai draft voter list released
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவுப் பட்டியலில், சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 14 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம் மற்றும் காரணங்கள்

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு முன்பு, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,04,694 பேர் ஆகும். இன்று வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் மட்டும் மொத்தமாக 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். மொத்தமாக நீக்கப்பட்ட 14.25 லட்சம் பேரில், இறந்த வாக்காளர்கள் 1.56 லட்சம் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், வாக்காளர் அட்டையில் உள்ள முகவரியில் இல்லாதவர்கள் 27,328 பேர் என்றும், குடிபெயர்ந்தோர் 12,22,164 பேர் என்றும், இரட்டைப் பதிவுகள் உள்ளோர் 18,772 பேர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கியத் தொகுதிகளின் தற்போதைய வாக்காளர் நிலவரம்

தமிழகத்தில் மொத்தமிருந்த வாக்காளா்களில் பெரும்பாலான கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த நிலையில்தான் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இன்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், மொத்தம் 13,31,243 பெண் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 1.86 லட்சம் வாக்காளர்களும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 1.50 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யக் கால அவகாசம்

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவித்து புதிதாக விண்ணப்பித்து இணைத்துக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டு வாக்காளர்கள் தங்கள் பெயரைப் பார்வையிடலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் மாறியவர்கள் படிவம் 8-ஐயும், புதிதாகச் சேருபவர்கள் படிவம் 6-ஐயும் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18-ஆம் தேதி வரை இணைத்துக் கொள்ளலாம். திருத்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்கள்

வாக்காளர் பட்டியல் (கோவை மாவட்டம்)

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 32,25,198

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 25,74,608

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,50,590

காஞ்சிபுரம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் -14,01,198

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 11,26,924

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,74,274

கரூர் மாவட்டம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் உள்ள வாக்காளர்கள் - 8,98,362

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 8,18,672

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 79,690

திண்டுக்கல்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 19,34,447

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 16,09,533

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,24,914

தஞ்சாவூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 20,98,561

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,92,058

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,06,593

திருச்சி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 23,68,967

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 20,37,180

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,31,787

நெல்லை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 14,20,334

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,03,368

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,16,966

விழுப்புரம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 17,27,490

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,44,625

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,82,865

அரியலூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,30,890

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,06,522

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 24,368

தருமபுரி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 12,85,432

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,03,917

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 81,515

கடலூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,93,577

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 19,46,759

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,46,818

கிருஷ்ணகிரி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 16,80,626

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,06,077

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,74,549

நாகப்பட்டினம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,67,730

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,10,392

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 57,338

செங்கல்பட்டு:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 27,87,362

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 20,85,491

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 7,01,871

திருப்பூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 24,44,929

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,81,144

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 5,63,785

திருவண்ணாமலை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,21,902

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,70,744

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,51,162

ராணிப்பேட்டை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 10,57,700

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 9,12,543

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,45,157

மதுரை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 27,40,631

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 23,60,157

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,80,474

கள்ளக்குறிச்சி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 11,60,607

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,76,278

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 84,329