சினிமா

செக் மோசடி வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

செக் மோசடி வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!
Director Lingusamy sentenced to one year in prison
ஆனந்தம், பீமா, சண்டகோழி பிரபல திரைப்படத்தை இயக்கியவர் லிங்கு சாமி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதி ப்ரதர்ஸ் பிலிம் மீடியா என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு ரூ.35 லட்சம் பணத்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் இயக்குநர் லிங்குசாமி கடனாக பெற்றார்.

இந்த கடனை அவர் திருப்பி செலுத்தாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடனை வட்டியுடன் ரூ.48.68 லட்சத்தை செலுத்துமாறு அந்த நிறுவனத்தில் மேலாளர் கூறியுள்ளார். ஆனால் லிங்குசாமி பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் இயக்குநர் லிங்குசாமி மீது தனியார் நிறுவனம் பணமோசடி வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்நிலையில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக 2 மாதத்திற்குள் திருப்பித்தரவும் நீதிபதி உத்தரவிட்டிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.