10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் சிஎஸ்கே (CSK) அணி ரவீந்திர ஜடேஜா உட்பட மொத்தம் 11 வீரர்களை விடுவித்துள்ளது. மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலை விடுவித்தது ரசிகர்கள் மத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் விடுவிப்பு
மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மொத்தம் ஒன்பது வீரர்களை விடுவித்துள்ளது. இதில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலை விடுவித்தது எதிர்பாராத ஒன்றாகும். மேலும், கடந்த ஆண்டு ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரும் நீக்கப்பட்ட மற்றொரு முக்கிய வீரர் ஆவார். இவர்களுடன் லவ்னித் சிசோடியா, குயின்டன் டி காக், அன்ரிச் நோர்ட்ஜே, ரஹ்மனுல்லா குர்பாஸ், மொயின் அலி, ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சகாரியா ஆகியோரும் கேகேஆர் அணியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏலத்தில் கலந்துகொள்ள கேகேஆர் அணியிடம் ரூ.64.3 கோடி கையிருப்பு உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விடுவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பரிமாற்றம் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா உட்பட மொத்தம் 11 வீரர்களை விடுவித்துள்ளது. சிஎஸ்கே விடுவித்த வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே, மதீஷா பதிரனா, மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட சாம் கரன் ஆகியோர் அடங்குவர். இந்திய வீரர்களில் ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேவால்ட் ப்ரெவிஸ் மற்றும் குர்ஜப்நீத் சிங் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
பதிரனா விடுவிப்பு குறித்த தகவல்
கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்திருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவையும் விடுவித்தது. பதிரனா 2022-இல் சிஎஸ்கேவில் இணைந்து இரண்டு போட்டிகளில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 2023-இல் அவர் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்துச் சிறப்பாகச் செயல்பட்டாலும், 2024-இல் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், கடந்த சீசனில் அவர் ரன்களை ஒரு ஓவருக்கு 10-க்கும் அதிகமாக விட்டுக்கொடுத்து, 13 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜடேஜாவின் பரிமாற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய தனது முதல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸுக்குத் திரும்பவுள்ளார். சிஎஸ்கே அணியில் ஒரு சீசனுக்கு ரூ.18 கோடி ஊதியம் பெற்ற ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஊதியக் குறைப்பை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸில் ஜடேஜா இனி ஆண்டிற்கு ரூ.14 கோடி மட்டுமே ஊதியம் பெறுவார் என்று ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

LIVE 24 X 7